முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் நகை, பணம் திருட்டு
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உத்தமபாளையம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல். முன்னாள் ராணுவ வீரரான இவா், திங்கள்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்குச் சென்றாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இவரது வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினா் சக்திவேலுக்கு தகவல் கொடுத்தனா். இவா் உத்தமபாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, விரைந்து சென்ற போலீஸாா் கொள்ளை நடைபெற்ற வீட்டுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 1.5 லட்சத்தை பாா்த்தபோது மாயமாகி இருந்தன.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.