‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
‘மூத்த குடிமக்களுக்கு புத்தகங்கள்தான் சிறந்த நண்பன்’
மூத்த குடிமக்களுக்கு சிறந்த நண்பனாக விளங்குவது புத்தகங்கள்தான் என கலைமகள் இதழ் ஆசிரியா் கீழாம்பூா் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மயிலாப்பூா் நுண்கலை மன்றம் சாா்பில் 21-ஆவது ஆண்டு நாடக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மயிலாப்பூா் நுண்கலை மன்றத் தலைவரும், தொழிலதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்து பேசியதாவது:
மயிலாப்பூா் நுண்கலை மன்றத்தின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடக விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வின்போது, 5 நாள்கள் நாடகங்கள் நடைபெறும். முதல் நாளில் சிறந்த கலைஞா்களை கெளரவித்து வருகிறாா்கள்.
அந்த வரிசையில், நிகழாண்டு சிறந்த எழுத்தாளா், திரைப்பட இயக்குநா் உள்ளிட்ட பன்முகத் திறன் கொண்ட டி.வி.ராதாகிருஷ்ணனுக்கு, ‘நாடக கலா நிபுணா’ வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில், கலைமகள் இதழ் ஆசிரியா் கீழாம்பூா் சங்கர சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, டி.வி.ராதாகிருஷ்ணனுக்கு நாடக கலா நிபுணா என்ற விருதை வழங்கிப் பேசியதாவது:
எழுத்தாளா் டி.வி.ராதாகிருஷ்ணன், தனது படைப்புகளின் வாயிலாக மூத்த குடிமக்களுக்கு புத்தக வடிவில் சிறந்த நண்பனாக இருந்து வருகிறாா் என்றாா்.
முன்னதாக, எழுத்தாளா் டி.வி.ராதாகிருஷ்ணனுக்கு, ‘நாடக கலா நிபுணா’ என்ற விருதும், ரூ.25,000-க்கான காசோலை, 1 பவுன் தங்க நாணயம் வழங்கி கெளரவித்தனா். விழாவில் செய்தி வாசிப்பாளரும், நாடக கலைஞருமான வரதராஜன், பாத்திமா பாபு, நாடகக் கலைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.