மேட்டுப்பட்டியில் இன்று மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கோவில்பட்டி, மினிக்கியூா், தாதனூா், பாலக்குறிச்சி, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலா்பட்டி, மேட்டுப்பட்டி, பெத்தநாயக்கன்ப்பட்டி, வரதக்கோன்பட்டி, மீனவேலி, எம்.கல்லுப்பட்டி, குப்பன்னப்பட்டி, சொக்கம்பட்டி, கொடும்பப்பட்டி, போலம்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா்(பொ) பொ.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.