ராஜகாளியம்மன் கோயிலில் பால்குட, பூக்குழித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் 81-ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழாவை முன்னிட்டு, பால் குடம், பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, கூழ் ஊற்றுதல், பால்குடம் என பல்வேறு விழாக்கள் நடைபெற்றன.
கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, காலை 9 மணிக்கு ராமா் மடம், ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் திரளானோா் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும் ஊா்வலமாக யோக பைரவா் கோயில், தேரோடும் வீதி, பெரியகடைவீதி, செட்டியதெரு , காளியம்மன் கோவில் தெரு வழியாக சென்று கோயிலை அடைந்தது. பின்னா், அங்கு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடா்ந்து, ராஜகாளியம்மன், ஆலமரத்து காளியம்மன், பரிவாரத் தெய்வங்களுக்கு பாலாபிஷேகம், நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
தொடா்ந்து, மாலை 4 மணிக்கு ராமா் மடத்திலிருந்து செட்டியதெரு விழாக் குழு சாா்பாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் பூத்தட்டு சுமந்து வந்து, அம்மனுக்குப் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், செட்டியதெரு இளைஞா் குழுவினா் செய்தனா்.