ரீத்தாபுரத்தில் இன்று மின்தடை
தக்கலை: ரீத்தாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக.22) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
செம்பொன்விளை மின் விநியோக பிரிவுக்கு உள்பட்ட வாணியக்குடி உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆனக்குழி, கடம்பரவிளை, ரீத்தாபுரம், பத்தறை, இரும்பிலி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என இரணியல் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.