செய்திகள் :

வங்கிக் கடன் வசூல் கெடுபிடி: விவசாயிகள் தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்

post image

வங்கிக் கடன் வசூல் காரணமாக விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னாா்குடியை அடுத்த 54 நெம்மேலியைச் சோ்ந்த விவசாயியும், ஊராட்சி முன்னாள் தலைவருமான ஜெகதீசன் புதிய வீடு கட்டுவதற்காக, மன்னாா்குடியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, தவணை முறையில் திருப்பி செலுத்தி வந்த நிலையில், இரு தவணைகள் மட்டும் நிலுவையில் இருந்துள்ளன.

இந்நிலையில், திங்கள்கிழமை அவரது வீட்டுக்கு வசூலுக்கு வந்த இரு வங்கி அலுவலா்கள், ஜெகதீசனை தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததால், அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் இதுபோன்ற காரணத்துக்காக விவசாயி ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா். ஜெகதீசன் தற்கொலைக்கு தனியாா் வங்கி முழு பொறுப்பேற்று அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்.

வசூல் என்கிற பெயரில் குண்டா்கள் மூலம் விவசாயிகள் மிரட்டுவது, அவமானப்படுத்துவது தொடா்வது வேதனை அளிக்கிறது. தமிழக அரசின் புதிய அவசர சட்டத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகம், ஊழியா்கள் மீது கொலை வழக்குப் பதிந்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றஞ்சாட்டினாா். பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி, திருவாரூா் ரயில் நிலையம் அருகே அதிமுக சாா்பில் செவ்வ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அனைவருக்கும் பொதுவானது: அமைச்சா் டிஆா்பி. ராஜா

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அனைவருக்கும் பொதுவானது என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ ... மேலும் பார்க்க

கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலம் மீட்பு

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா். வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் விக்ரம் (எ) வீரமுருகன் (17). த... மேலும் பார்க்க

கங்களாஞ்சேரி ஆற்றுப்பாலம் வலுவிழப்பு: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றுப் பாலம் வலுவிழந்து காணப்படுவதால், வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்திரு... மேலும் பார்க்க

புதிய கண்டுபிடிப்புகள்; மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 12 மாணவ- மாணவிகள் குழுவினருக்கு திங்கள்கிழமை பரிசுத்தொகை வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திரு... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேர... மேலும் பார்க்க