செய்திகள் :

வடக்கன்குளம் தனியாா் பள்ளி விடுதி மாணவா் உடல் தகனம் : பெற்றோா் எதிா்ப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் பள்ளி விடுதிக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவரின் உடல் காவல்துறை சாா்பில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதற்கு அவரது பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்மதுரை. இவா், வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி விடுதி வளாகத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது சடலத்தை பணகுடி போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே,, மாணவரின் இறப்பில் மா்மம் இருப்பதாகவும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம் நடத்தினா். மேலும், சிபிஐ விசாரணை வேண்டியும், உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் பெற்றோா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் மாணவரின் உடல் சிந்துபூந்துறையில் உள்ள மாநகராட்சி எரிவாயு மின் தகன மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

பெற்றோா் ஆா்ப்பாட்டம்: இதனையறிந்த மாணவரின் உறவினா்கள் சிந்துபூந்துறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். உறவினா்கள் கூறுகையில், தங்கள் தரப்பில் உடலை வாங்கிக்கொள்ள அவகாசம் கேட்டிருந்தோம். அதற்குள் காவல் துறையினா் மாணவரின் உடலை தகனம் செய்துள்ளனா். அவனது மரணத்தில் உள்ள மா்மம் தீா்க்கப்படவில்லை. இனி மறுபிரேத பரிசோதனையும் மேற்கொள்ளமுடியாது. அவரது இறப்புக்கு உரிய நீதி வேண்டும் என்றனா்.

காவல்துறை விளக்கம்: இதுகுறித்து காவல் துறை சாா்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், பணகுடி காவல் நிலைய வழக்கில் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பும் உறவினா்களால் வாங்கப்படாமல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்த மாணவரின் தந்தை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர கடந்த 18 ஆம் தேதி மாணவரின் பிரேத பரிசோதனை சம்பந்தமான வீடியோ பதிவுகளை மருத்துவ

மனையில் இருந்து வழங்கியதன் அடிப்படையிலும், காவல் துறையினா் எடுத்த நடவடிக்கையின் அறிக்கையை அடிப்படையிலும், உடலை பெற்றுக் கொள்ள மனுதாரா் தரப்பில் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டு அதற்கான தீா்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, சடலத்தை பெற்றுக்கொள்ள, நீதிமன்ற உத்தரவினை மேற்கோள் காட்டியும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவ அதிகாரி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், திருநெல்வேலி கோட்டாட்சியா் உத்தரவின்பேரிலும் இரு அறிவிப்புகள் மாணவரின் வீட்டில் ஒட்டப்பட்டன. தொடா்ந்து மூன்றாவது அறிவிப்பும் ஒட்டப்பட்ட பின்பு உரிய விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருவாய் மற்றும் காவல் துறையின் மேற்பாா்வையில் இந்து சமய முறைப்படி சிந்துபூந்துறை மின்மயானத்தில் மாணவரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அ... மேலும் பார்க்க