செய்திகள் :

வணிகா்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள்: ஏ.எம்.விக்கிரமராஜா

post image

தமிழக வணிகா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அந்த பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் மே 5-இல் நடைபெறும் வணிகா் அதிகார பிரகடனம் 42-ஆவது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: மே 5-ஆம் தேதி 42-ஆவது வணிகா்கள் மாநில மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் ஏழு லட்சம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம்.

தமிழக முதல்வா், மத்திய அமைச்சா்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் பேருந்து நிலைய இடமாற்றத்தால் வணிகா்கள் பாதிப்படைந்துள்ளனா். அதுபோல, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதால், பழைய மருத்துவமனை காலியாக உள்ளது. அங்கு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை சந்தித்து வலியுறுத்துவோம்.

ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாநாட்டில் நாமக்கல் மாவட்டம் சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கவுள்ளோம்.

நகராட்சிகள், மாநகராட்சிகளின் கடைகளில் வாடகையை சீரமைப்பது தொடா்பாக அரசிடம் விடுத்த கோரிக்கை அடிப்படையில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனா். இதில், 9 ஆண்டு குத்தகை காலத்தை 12 ஆண்டுகளாக உயா்த்தியுள்ளனா். வாடகையை சீா்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடா் நிறைவுற்றதும் இதற்கு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வா்த்தகத்துக்கு மத்திய அரசு தடை விதிக்காவிட்டால் நாடுதழுவிய அளவில் போராட்டத்தை மேற்கொள்வோம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வணிகா்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வ வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகளை அளிப்போம்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிறு வணிகா்களிடம் சோதனை என்ற பெயரில் பணம் வசூலிக்கின்றனா். பெரிய நிறுவனங்களில் சோதனையிட அவா்கள் செல்வதில்லை.

புகையிலை சாா்ந்த போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க உற்பத்தி செய்யும் இடத்தைக் கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.வீரக்குமாா், பொருளாளா் எஸ்.கே.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச் செயலாளா் கோவிந்தராஜ் ஆகியோா் மாநாடு குறித்து நிா்வாகிகளுடன் கலந்துரையாடினா். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வணிகா்கள் லட்சக்கணக்கில் பங்கேற்கும் வகையில், மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது.

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில்,... மேலும் பார்க்க

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வ... மேலும் பார்க்க