ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை
செய்யாறு: செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக, தூக்கில் தொங்கியவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செங்காடு
கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் கோவிந்தன்(22). இவா், சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். மேலும், வயிற்று வலியால் இவா் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஆக.27-ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே வலிதாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகத்
தெரிகிறது.
இதனைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா்
கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளாா்.