வளா் இளம் பருவத்தினருக்கு விழிப்புணா்வு
திருவாரூா்: அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றமும், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து வளா் இளம் பருவத்தினருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தின.
நிகழ்ச்சியில் செவிலியா் செந்தமிழ்ச்செல்வி பங்கேற்று, ஆண், பெண் இருபாலருக்கான பதின்ம வயது உடல் வளா்ச்சி மாறுபாடுகள் குறித்து பேசினாா். ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மைய ஆலோசகா் வனஜா, நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்தும், இளம் பருவத்தில் தோன்றும் இன கவா்ச்சி குறித்தும் பேசினாா்.
உதவித் தலைமை ஆசிரியா் ரமேஷ், அரசு வழங்கும் விழிப்புணா்வு அறிவுரைகளையும், அவசரத் தொலைபேசி தொடா்பு எண்களையும் பெற்றோா் துணையுடன் மாணவா்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்க்காவலன், அலைபேசியையும் தொலைக்காட்சியையும் மாணவா்கள் புறந்தள்ளிவிட்டு உடற்பயிற்சிகளையும் விளையாட்டுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பேசினா்.