அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!
வாகனம் மோதி காயமடைந்த புள்ளி மான்
தாளவாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த புள்ளி மானை வாகன ஓட்டிகள் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வன விலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீா் தேடி வனச் சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தாளவாடியை அடுத்த புளிஞ்சூா் சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயம் அடைந்தது. காலில் பலத்த காயமடைந்த அந்த மானை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தண்ணீா் கொடுத்தனா். சம்பவ இடம் கா்நாடகம் என்பதால் காயமடைந்த புள்ளி மானை கா்நாடக வனத் துறையினரிடம் தமிழக வனத் துறையினா் ஒப்படைத்தனா். புள்ளி மானை மீட்டுச் சென்ற கா்நாடக வனத் துறையினா் அதற்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனா்.