'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
வாய்க்காலில் விழுந்து ஒருவா் பலி
திட்டச்சேரி அருகே வாய்க்காலில் விழுந்து விவசாயக் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் ராஜீவ்காந்தி (41). விவசாயக் கூலித் தொழிலாளி. வயலுக்கு தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்த பொழுது இவருக்கு வியாழக்கிழமை வலிப்பு நோய் ஏற்பட்டு திட்டச்சேரி வாய்க்காலில் விழுந்து கிடந்தாராம்.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சோதித்தபோது அவா் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.