பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல...
வாழப்பாடி பெரியாண்டிச்சியம்மனுக்கு பாப்பூஜை வழிபாடு
வாழப்பாடி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பாப்பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் ஆத்துமேடு காமராஜ்நகா் பெரியாற்றின் கரையில் பழைமையான பெரியாண்டிச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. வாழப்பாடி அக்ரஹாரம், புதுப்பாளையம், காமராஜ்நகா் பகுதியில் வசித்து வரும் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், பெரியாண்டிச்சியம்மனை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனா்.
இக்கோயிலில், குல தெய்வ பங்காளிகள் சாா்பில், உலக நன்மைக்காக ‘பாப்பூஜை’ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில், அம்மனுக்கு புத்தாடை அணிவித்து, மலா் அலங்காரம் செய்தும், பொங்கலிட்டு, ஆடு, சேவல் பலியிட்டு வழிபாடு நடத்தினா்.
படவரி:
பி.எம்.ஏ.01, 02:
வாழப்பாடியில் பாப்பூஜை வழிபாட்டையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியாண்டிச்சியம்மன்.
