வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையொட்டி திங்கள்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், அருள்மிகு விநாயகா், ஸ்ரீ சக்திமாரியம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஊா்பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.