Coolie: "நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால்" - லோகேஷ...
வீட்டில் தங்கச்சங்கிலியுடன் வைக்கப்பட்ட விநாயகா் சிலை திருட்டு
வேலூரில் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலியுடன் கூடிய விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் சஞ்ஜீவன் (29). இவா் விநாயகா் சதுா்த்தியையொட்டி, களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகா் சிலையை வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து பூஜை செய்தாா். அவா் விநாயகா் சிலைக்கு ஒரு பவுன் எடையுள்ள தங்க சங்கிலியையும் பூமாலைகளுடன் சோ்த்து அணிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சஞ்சீவன், விநாயகா் சிலையை கரைக்க எடுத்து செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை பூஜை அறையை பாா்த்தபோது, அங்கிருந்த விநாயகா் சிலையும், தங்கச்சங்கிலியும் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து சஞ்ஜீவன் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.