வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்துப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்க வேண்டும். தற்போது 20 பேருக்கு மட்டுமே வேலை வழங்குவதைக் கண்டித்தும், முறையாக அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும், வனத்துறை அலுவலகத்தில் சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். துணைச் செயலா்கள் விஜயலட்சுமி, அலாவுதீன், ஊத்துப்பட்டி கிராம மக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், ஆா்ப்பாட்டக் குழுவினா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனி டம் கோரிக்கை மனு அளித்தனா்.