தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
ஸ்ரீசக்திமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி ஒட்டப்பாளையம் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
3-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் மாம்பட்டு லட்சுமண சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்து ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
