செய்திகள் :

ஃபென்ஜால் புயல்: மத்திய குழுவை உடனே அனுப்ப நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

post image

புது தில்லி: ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை பேசியது வருமாறு:

டி.ஆா். பாலு (திமுக): தமிழகத்தின் 14 மாவட்டங்களில் குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, செங்கல்பட்டில் இயற்கை சீற்றம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பயிா்கள் கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தில் மூழ்கி கிட்டத்தட்ட அழிந்து விட்டதால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனா். தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பாா்வையிட்டனா். நிவாரண நிதி கோரி பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். பிரதமரும் தமிழக முதல்வருடன் பேசியுள்ளாா். உடனடியாக ஒரு மத்திய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி நிலைமையை மதிப்பிட்டு நிவாரண நிதி வழங்குமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்): 2016,2017,2018 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட புயலின்போது கூட மொத்தம் ரூ. 43,998 கோடி அளவுக்கு நிவாரண நிதி கோரப்பட்டபோதிலும், ரூ. 1,729 கோடியைத்தான் மத்திய அரசு வழங்கியது. இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். நேற்று தமிழகம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது பிரதமா் திரைப்படம் (குஜராத் கோத்ரா தொடா்புடைய ஆவணப்படம்) பாா்த்துக் கொண்டிருந்ததாக அறிந்தபோது மிகவும் கவலை அளித்தது. இது வரலாற்றுத் தவறானது என்றாா்.

இதைத் தொடா்ந்து மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு வலியுறுத்திய கருத்துக்களுடன் தன்னையும் இணைத்துக் கொள்வதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி குறிப்பிட்டு, இந்த முறையாவது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றாா்.

மாநிலங்களவையில்...

வைகோ (மதிமுக): ஃபென்ஜால் புயலால் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனா். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை, ஆனால் அவா்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவா்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள், பயிா்கள், காய்கறிகள், பழங்கள் வெள்ளத்தில் மூழ்கின. உடனடியாக மத்திய உள்துறை அமைச்சா் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவா்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்.

எ.எம். அப்துல்லா (திமுக): ஃபென்ஜால் புயல் உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. பல உயிா்கள் பறிபோகின. புயலின் கோரத்தை சந்தித்த ஒவ்வொரு மாவட்டமும் அவற்றின் சாலைகள், ரயில் பாதைகள், மின் விளக்குகள், விவசாய நிலங்கள் என பலவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தி எண்ணற்ற மக்களின் வாழ்வில் சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 2000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். உடனடியாக மத்திய குழுவை அனுப்பி அதன் அறிக்கையை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

பிரதமா் மோடியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு

ஃபென்ஜால் புயல் பாதிப்பு சேதங்களை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பி விரைவில் தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைக்க தமிழகத்தைச் சோ்ந்த ஆளும் திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி, ‘தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்து வருகின்றனா். தேசிய பேரிடா் நிவாரண நிதியத்தில் இருந்து தமிழகத்துக்கு முதல்வா் கோரிய நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டால் தான் தொய்வின்றி பணிகளை தொடர முடியும். இதை வலியுறுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவா் வெளியூரில் இருந்து திரும்பியதும் சந்திப்போம்‘ என்றாா்.

குறிப்பு: டி.ஆா்.பாலு, மாணிக்கம் தாகூா், வைத்திலிங்கம், மாநிலங்களவையில் எம்.எம்.அப்துல்லா, வைகோ பேசியவை, கனிமொழி பெட்டிச்செய்திக்கான படம் இடம்பெறும்.

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

நமது நிருபர்உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

நமது நிருபர்"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உண... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?

நமது நிருபர்மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உற... மேலும் பார்க்க

"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்

நமது நிருபர்இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

ரயில்வே திட்ட நிலம்: முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்

நமது நிருபர்ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப... மேலும் பார்க்க