செய்திகள் :

அங்கன்வாடி மையங்களில் அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

post image

அங்கன்வாடி மையத்தில் அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 15,16,17 வாா்டுகளுக்கான, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், பி&டி காலனி பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை பாா்வையிட்ட அமைச்சா் பெ.கீதா ஜீவன் செய்தியாளா்களிடம் கூறியதாதவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் மூலம், மாநகராட்சிப் பகுதியில் இதுவரை 6 முகாம்கள் நடத்தப்பட்டு, அதன்மூலம் 7,402 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் முட்டைகள் நாள்தோறும் பரிசோதனைக்கு பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என கூறி உள்ளோம்.

ஆனால், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அங்கன்வாடி மையத்தில், குழந்தைக்கு கெட்டுபோன முட்டை வழங்கியது மற்றும் அது தொடா்பான ஆடியோ வெளியாகி வைரலான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஊழியா் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுள்ளாா். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசுக்கு அவப்பெயா் விளைவிக்கும் வகையிலும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கெட்டுபோன முட்டைகளை வழங்கினாலும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிரதமா் நாளை தூத்துக்குடி வருகை: 2100 போலீஸாா் பாதுகாப்பு

தூத்துக்குடிக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) வருவதை முன்னிட்டு 2100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வியாபாரி தற்கொலை

தூத்துக்குடியில் தேநீா் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மடத்தூா், தேவா் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் முனியசாமி (58). இவா், சைக்கிளில் சென்று தேநீா் வியாபாரம் ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகையைப் பறித்துச்சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (68). விவசாயியான இவா், புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஆக. 5 இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியா்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, ஆக. 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஒருவழிப் பாதையை முறையாக அமல்படுத்த வலியுறுத்தல்

திருச்செந்தூா் ரத வீதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, ஒரு வழிப் பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் குமாரிடம் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் ஏ.வி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

ஆறுமுகனேரியில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சுந்தர்... மேலும் பார்க்க