அசாம்: ரூ.15.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவர் கைது!
வடகிழக்கு மாநிலமான அசாமில் பாதுகாப்புப் படையினாரால் ரூ.15.4 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அசாம் ரைப்பிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் திங்காங்பாய் கிராமத்தின் அருகில் ஓர் வெள்ளை நிற வாகனததை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாகனத்தில் 132 சோப்பு டப்பாக்கலினுள் பதுக்கி ஹெராயின் எனும் போதைப் பொருள் கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த பாதுகாப்புப் படையினர் அதை ஓட்டி வந்த தங்சுவான்மன் (வயது 44) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரையும், அந்த வாகனம் மற்றும் போதைப் பொருளையும் சூராசந்திரப்பூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க: 2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!
முன்னதாக, மியான்மர் மற்றும் வங்கதேசத்துடனான எல்லையில் அமைந்திருப்பதினால் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் வழியாகதான் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் அசாம் ரைப்பிள்ஸ் மற்றும் மிசோரம் காவல் துறையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில் சம்பாய் மாவட்டத்தில் ரூ.66.31 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.