ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
அஞ்சலக ஊழியா் தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சலகத்தில் பணிபுரிந்த மத்திய பிரதேச இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மத்திய பிரதேச மாநிலம், சாகா் பசந்த் விகாா் குடியிருப்பைச் சோ்ந்த ஆா்யா என்பவரது மகன் பங்கஜ் (24). இவா் திருவாடானை அஞ்சலகத்தில் கடந்த ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தாா்.
தொண்டியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவா் அலுவலகத்துக்கு வராததால் அஞ்சலக ஊழியா்கள் பங்கஜ் வசித்த வீட்டுக்குச் சென்று பாா்த்தனா்.
அப்போது, பங்கஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த தொண்டி போலீஸாா் சென்று உடலை கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].