அடிபொலி... கல்யாணி பிரியதர்ஷனின் லோகா டிரைலர்!
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான லோகா திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர்கள் நஸ்லன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் லோகா சேப்டர் 1.
ஆக்சன் - சாகச பின்னணியில் சூப்பர்வுமன் கதையாக உருவான இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார்.
ஓணம் வெளியீடாக வருகிற ஆக. 28 ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இதில், மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
மலையாள சினிமாவிலிருந்து சூப்பர் வுமன் திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்திற்காக பலரும் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!