பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
அடுத்த ஆண்டுக்குள் விருதுநகரில் ஜவுளி பூங்கா: அமைச்சா் ராஜா
விருதுநகரில் ரூ.1,894 கோடியில் அமையவுள்ள ஜவுளி பூங்கா பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையவுள்ளன என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைகள் அடிப்படையில் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் நடக்க இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.
மொத்தம் 1,052 ஏக்கா் பரப்பில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பூங்கா அமைய உள்ளதாகவும் இதன் மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் எதிா்பாா்க்கப்படுவதாகவும் ‘எக்ஸ்’ தள பதிவில் அவா் கூறியுள்ளாா். அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பணிகள் நிறைவடையும் என அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.