நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்...
'அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?' - சந்தேக தொனியில் திருமா!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அஜித் குமாரின் காவல் மரணம், விஜய்யின் அரசியல் என பலவற்றைப் பற்றியும் திருமா பேசியிருக்கிறார்.

திருமாவளவன் பேசியதாவது, 'அஜித் குமார் கொலையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவை எடுத்தார். முதல்வரின் நடவடிக்கைகள் கடும் துயரத்திலும் ஒரு ஆறுதலை தருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் இதில் அரசியலே செய்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி திமுகவை விமர்சிக்கிறார். அது அவருடைய அரசியல். அதை நாம் விமர்சிக்க முடியாது. ஓரணியில் தமிழ்நாடு என்பதை தமிழ்நாட்டுக்குள் சங்பரிவார அமைப்புகளை புகவிடாமல் செய்ய ஓரணியில் ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

ராமதாஸை ஏன் சந்தித்தேன் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டார். அதற்குமேல் இதை பேச முடியாது. பாமகவின் முரண்பாடுகள் தீரும். இருவரும் ஒன்றிணைந்தே தேர்தலை சந்திப்பார்கள் என்றே நினைக்கிறேன். எடப்பாடிக்கு ரொம்பவே தாமதமாக Z+ பாதுகாப்பை வழங்கியிருக்கிறார்கள். அவரின் பாதுகாப்புக் கருதி ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். விஜய் திமுகவையும் பாஜகவையும் எதிரிகள் என்கிறார். அதிமுகவைப் பற்றி பேசவே இல்லை. அதிமுகவை தோழமை சக்தியாக பார்க்கிறாரா எனும் கேள்வி எழுகிறது.' என்றார்.