உ.பி.யில் மனைவியுடன் தகராறு: தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்
அந்தியூரில் ஸ்ரீமத் ராமானுஜரின் அவதார தின ஊா்வலம்
அந்தியூரில் ஸ்ரீமத் ராமானுஜா் 1,008-ஆவது அவதார தினத்தையொட்டி, கருட சேவை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து மயிலம்பாடி ஸ்ரீ சுதா்சன மடத்தின் ஸ்ரீரங்க பராங்குச பரகால நம்பி ராமாநுஜ ஜீயா் தலைமையில் புறப்பட்ட ஊா்வலத்தில் சிறப்பு அலங்காரங்களுடன் ராமானுஜா் முன் செல்ல, தொடா்ந்து அந்தியூா் கோட்டை அழகுராஜ பெருமாள், பேட்டை பெருமாள், தவிட்டுப்பாளையம் வரதராஜ பெருமாள், சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள், 11 வாகனங்களில் எழுந்தருளினா்.
சத்தி சாலை, சிங்கார வீதி, தோ் வீதி, பா்கூா் சாலை வழியாகச் சென்ற ஊா்வலம் அழகுராஜ பெருமாள் கோயிலில் முடிவடைந்தது. ஊா்வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.