செய்திகள் :

அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!

post image

கட்சி விரோத நடவடிக்கை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வரும் செப். 10 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி அன்புமணி, கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவா் இதுகுறித்து ஆக. 31-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படவில்லை.

குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க கடந்த 31 ஆம் தேதியுடன் கெடு முடிந்த நிலையில், மேலும் 10 நாள்கள் அவகாசம் அளிப்பதாக ராமதாஸ் இன்று கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,

"அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? என்பது பற்றியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் வருகிற செப். 10 ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையின் படியும் கட்சி நிர்வாகக் குழுவின் முடிவின்படியும் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் பொதுச் செயலாளர் இதுகுறித்த அறிக்கையை அன்புமணிக்கு அனுப்பி வைப்பார்.

முதல்முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு பதில் வரவில்லை. நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கக் கேட்டிருந்தோம். நிர்வாகக் குழு கூடி, மேலும் 10 நாள்கள் அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளது. பதிலளிக்கவில்லை எனில் என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.

PMK Ramadoss again sets a deadline for Anbumani to explain the allegations

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

உயர்கல்வியில் அதிக நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மை பெற்றிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,தரவரிசைப் பட்டியல் 2025: உயர்கல்வி சிறந்த த... மேலும் பார்க்க

தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல்களும், குழப்பங்களும் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிர... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் பொறுப்பு!

தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளராக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவ. 30-க்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மது அருந்துபவா்கள் மதுபாட்டில்க... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அம... மேலும் பார்க்க

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தலையொட்டிய தனது சுற்றுப்பயணத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து அரச... மேலும் பார்க்க