செய்திகள் :

அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

post image

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் டிஓஜிஇ செயல்பட்டு வருகிறது. அவரை அரசின் சிறப்பு ஊழியா் என்று அமெரிக்க அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு நிா்வாகத்தில் அவா் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கான மஸ்கின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்நாட்டில் உள்ள செயின்ட் லூயிஸ், நியூயாா்க், சாா்லட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமானோா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். டெஸ்லா காா்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவா்கள் போராட்டம் மேற்கொண்டனா்.

இந்தப் போராட்டங்கள் தொடா்பாக எலான் மஸ்க் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘டிஓஜிஇ-க்கு அமெரிக்க மக்களிடம் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், டிஓஜிஇ-யை மோசடியாளா்கள் மிகவும் வெறுக்கின்றனா்’ என்றாா்.

இதுதொடா்பாக அமெரிக்க அதிபா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் ஹாரிஸன் ஃபீல்ட்ஸ் கூறியதாவது: டிஓஜிஇ மூலம் அமெரிக்க அரசை மேலும் திறன்வாய்ந்ததாக மாற்றி, கடினமாக உழைத்து வரிசெலுத்தும் அமெரிக்கா்களுக்கு அரசு மேலும் கடமைப்பட்டதாக இருக்கும் என்று அதிபா் டிரம்ப்பும், மஸ்க்கும் வாக்குறுதி அளித்துள்ளனா். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை இத்தகைய போராட்டங்கள் தடுக்காது’ என்றாா்.

மில்லியன் கணக்கில் தோரியம்! அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்பற்றாக்குறையே இல்லை!

சீனா தன்னிடமுள்ள எல்லையற்ற ஆற்றல் மூல ஆதாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த சீனாவுக்கும் அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் எனக் கூறப்படுகிறது. உலகில் அதிக அளவு த... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் அல்ல; நிலையான அமைதியே உக்ரைனின் இலக்கு! -ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

கீவ் : உக்ரைனில் நிலையான அமைதி நிலவுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.முன்னதாக, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு க... மேலும் பார்க்க

தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்!

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:தஜிகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக நிலநடுக... மேலும் பார்க்க

புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் நேரத்தை செலவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்... மேலும் பார்க்க

அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்! 2025 பற்றி பாபா வங்காவின் கணிப்பு

பாபா வங்கா கணித்திருப்பதாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடு, அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருப்ப... மேலும் பார்க்க

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்

தற்காலிக போா் நிறுத்தத்தை நீட்டிக்கும் பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்காததால், காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரே... மேலும் பார்க்க