வளா்ச்சி எனும் பெயரில் தலித் நிலங்கள் பறிப்பு: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
பாரிஸ் : பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக பிரான்ஸுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தார் மோடி.
இம்மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இணைந்து பிரதமா் மோடி தலைமை தாங்கினாா். அப்போது, ஏ.ஐ. தொழில்நுட்பத் திறன் மற்றும் வரம்புகளைக் குறிப்பிட்டு அவா் தொடக்க உரையாற்றினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற செய்யறிவு செயல்திறன் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டபின், பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இன்று(பிப். 12) அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதனிடையே, பிரான்ஸின் மார்செய்லேவில் கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக அலுவலகத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் சேர்ந்து இன்று(பிப். 12) பிரதமர் திறந்து வைத்தார்.