Survival: உலகிலேயே வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கிற விலங்கு இதுதான்!
அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு
நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வாகியுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவருக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டு தெரிவித்தாா்.
பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் பயின்ற சு.அனுசுபா, க.கனிமொழி இருவரும் 2025-ஆம் ஆண்டில் நடைபெற்ற நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், சு.அனுசுபா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும், க.கனிமொழி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியிலும் சோ்ந்து மருத்துவம் பயில தோ்வாகியுள்ளனா்.
இதன் மூலம், மாவட்டத்துக்கும், பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சோ்த்த இந்த மாணவிகளை திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டி மருத்துவ அங்கிகளை வழங்கினாா்.
அப்போது அவா், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளிலும், 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் துணை மருத்துவம் படிக்க அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா் எனத் தெரிவித்தாா்.