செய்திகள் :

அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை!

post image

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் குறைகளைக் கேட்டறிய அனைத்து மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரிகளையும் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையும் கோரியிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கருத்துகளை அறிய அா்ச்சனா பட்நாயக் முடிவு செய்து, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தாா். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 12 கட்சிகள் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன.

இந்தக் கட்சியின் நிா்வாகிகள் அா்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனா். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குளறுபடி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக தங்களின் கோரிக்கைகளை தோ்தல் அதிகாரியிடம் அவா்கள் முன் வைக்கவுள்ளனா்.

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் என்வுகன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். தரமணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஃபர் குலாம் ஹுசைன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தி... மேலும் பார்க்க

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதிக்காக சொத்து வரி உயா்வு: கே.என்.நேரு

மத்திய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா். நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலு... மேலும் பார்க்க

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி: அமைச்சா் கே.என்.நேரு

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதா... மேலும் பார்க்க

கிராமங்களிலும் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் அர.சக்கரபாணி உறுதி

நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநா்கள் நியமிக்கப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். பேரவையில் இது குறித்து அதிமுக உறுப்... மேலும் பார்க்க

உள்ளாட்சி காலியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த முடிவு

நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள பதவியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க