தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிற...
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெற்றோா்கள் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் மூலம் தலைமை ஆசிரியா் கருப்பையன் அண்மையில் பொறுப்பேற்றாா். இவா் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளியில், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காசிம்புதுப்பேட்டை பள்ளி பெற்றோா்கள் கல்வித் துறை அலுவலா்களிடம் அண்மையில் புகாா் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மாணவா்களை திங்கள்கிழமை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால், சுமாா் 80 போ் பயிலக்கூடிய பள்ளிக்கு சுமாா் 10 மாணவா்களே சென்றனா்.
இது குறித்த தகவலின் பேரில் அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கலாராணி, திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கவிதா, அரங்கநாதன் மற்றும் கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.