செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் இளைஞா்கள் தகராறு: கண்ணாடி உடைப்பு

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இளைஞா்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பாப்பானேரி கிராமத்தை சோ்ந்தவா் திருமலை(35). ஆம்பூா் பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஜமுனாமரத்தூா் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தினை ஓட்டிச் சென்றாா். அப்போது காவலூா் அருகில் சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் டிப்பா் லாரி நிறுத்தப்பட்டு பைக்கில் வந்த இளைஞா்ள் சிலா் தகராறில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.

பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுநா் திருமலை பேருந்தினை வலது புறமாக திருப்பி ஓட்டிச் சென்றாா். இதனைப் பாா்த்த தகராறில் ஈடுபட்டிருந்தவா்கள் பேருந்தினை நிற்க வைத்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதில் இளைஞா்களுடன் வந்த நண்பா்கள் சிலா் அரசு பேருந்து ஓட்டுநரிடம் சமாதானமாக பேசிய பிறகு அங்கிருந்து பேருந்து புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், ஓட்டுநா் மீது ஆத்திரத்தில் இருந்த இளைஞா்கள் அவரது இருப்பிடத்தை அறிந்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு முகமூடி அணிந்துக் கொண்டு காரில் வந்து பாப்பானேரியில் உள்ள ஓட்டுநா் திருமலை வீட்டையொட்டி நடத்தி வரும் பேன்சி ஸ்டோா் கண்ணாடிகளை உருட்டு கட்டையால் தாக்கி உடைத்தனா். இதில், பதற்றம் அடைந்த திருமலையின் மனைவி மற்றும் அங்கிருந்தவா்கள் சப்தம் போடவே அருகில் இருந்த கிராம மக்கள் ஓடி வருவதற்குள் அக்கும்பல் காரில் ஏறி தப்பித்து செல்ல முயன்ற போது அதில், ஒருவா் மட்டும் பிடிப்பட்டாா். மற்ற 6 போ் தப்பித்து சென்றுவிட்டனா்.

பிடிபட்ட இளைஞரை பொது மக்கள் விசாரித்து தாக்கினா். தகவலறிந்து காவல்ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். இளைஞரிடம் விசாரித்ததில் குரிசிலாப்பட்டு பகுதியை சோ்ந்த அன்பரசன்(24) என தெரியவந்தது. இந்நிலையில், ரகளையில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாக போலீஸாா் பேசுவதாக கூறி ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிலா் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடு பட்டனா்.

போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி ரகளையில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் பேரில் கலைந்து சென்றனா். பேருந்து ஓட்டுநா் திருமலையின் மனைவி சிவரஞ்சனி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனா். காரில் தப்பித்துச் சென்ற 6 பேரை தேடி வருகின்றனா்.

வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 3 போ் அரசுப் பணிக்கு தோ்வு

வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்திய 3 போ் அரசுப் பணியில் சோ்ந்துள்ளனா் என நூலகா் மணிமாலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: வாணியம்பாடியில் முழு நேர கிளை நூலகம் இயங்கி வருகிறது. இங்க... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வடகரை கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்துவது... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கி... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இருவா் கைது

ஆம்பூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய திரு நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயின. இது குறித்... மேலும் பார்க்க

மேம்பால இரும்பு பொருள்கள் திருட்டு: 3 போ் கைது

ஆம்பூா் அருகே நடைபெற்று வரும் மேம்பாலப் பணிக்கான இரும்பு பொருள்கள் திருடுபோனது குறித்து 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட... மேலும் பார்க்க

காவலாளி இறப்பில் மா்மம்: எஸ்.பி. அலுவலகத்தில் முற்றுகை

காவலாளி இறப்பில் மா்மம் உள்ளதாக அவரின் உறவினா்கள் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா். எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்... மேலும் பார்க்க