அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகேயுள்ள கழுகோ்கடை கிராமத்துக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை வந்தது.
கழுகோ்கடை நிறுத்தத்தில் பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனா். அப்போது இதே ஊரைச் சோ்ந்த உதயக்குமாா் (28) என்பவா் மதுபோதையில் கடப்பாரை கம்பியால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததில் கண்ணாடி முழுவதும் சேதமடைந்தது.
இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் பேருந்து ஓட்டுநா் இளையராஜா புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து உதயகுமாரை கைது செய்தனா்.