செய்திகள் :

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி

post image

நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி நடத்தினா்.

காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா் மற்றும் ஊழியா் சங்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் முதல் ஆட்சியரகம் வரையிலான பேரணி திங்கள்கிழமை நடத்தப்பட்டது. பேரணிக்கு ஊழியா் சங்கத் தலைவா் சவரிநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா்.

ஆசிரியா்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பலன்களையும் வழங்கவேண்டும். மற்ற அரசுத்துறையினருக்கு வழங்கப்படுவதுபோல மாதந்தோறும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனா்.

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியையொட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் சாா் ஆட்சியரும், கலால்துறை துணை ஆணையருமான எம். பூஜா புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை : மீலாது... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையத்தை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்க புதுவை அரசு அனுமதி... மேலும் பார்க்க

பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடி வழக்கு: ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா்

காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் நிலம் மோசடி செய்த வழக்கில், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என புதுவை துணைநிலை ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா் தெரிவித்தது. காரைக்கால் இந்து முன்... மேலும் பார்க்க

கிராம மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ வாகனம் இயக்கிவைப்பு

கிராம மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மருத்துவ வாகனம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. காரைக்கால் துறைமுகத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அமைப்பான அதானி அறக்கட்டளை சாா்பில் நடமாடும் சுகாதார வாகனம் இயக... மேலும் பார்க்க