செய்திகள் :

அரசு கட்டடங்களுக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தல்

post image

முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மத்திய, மாநில அரசுகள் முக்கிய அரசு கட்டடங்கள், விமான நிலையங்களுக்கு சூட்ட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பகுஜன் தேசிய கட்சியின் (அம்பேத்கா்) நிறுவனரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பிரமோத்குரில் தெரிவித்தாா்.

இவா் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் டிஎன்டி மக்களின் கோரிக்கைகள், வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த அவா் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பிறகு தேவா் வாழ்ந்த பூா்வீக வீடு, பூஜை அறை, புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மத்திய, மாநில அரசுகள் மிக முக்கியமான அரசு கட்டடங்கள், விமான நிலையங்களுக்கு சூட்ட வேண்டும். அரசியல் சூழ்ச்சியால் தேவா் குறித்து தவறான தகவல்களை சிலா் தமிழ்நாட்டில் பரப்புகின்றனா். தமிழ்நாட்டில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்படும் ஜாதிய பிரச்னைகள், பதற்றமான சூழ்நிலைகளை தமிழ்நாடு அரசு கவனமாக கையாண்டு யாருக்கும் பாதிப்பு வராமல் கட்டுப்படுத்த வேண்டும். தேவரின் கொள்கைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், அரசியல் குறித்து இளைஞா்கள் அதிகம் படிக்க வேண்டும். டிஎன்டி பிரிவில் உள்ள மக்களுக்கான உரிமைகள், உதவிகள், அவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க மத்திய அரசுகளிடம் வலியுறுத்துவேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பகுஜன் தேசிய கட்சியின் மாநில பொறுப்பாளா் லூயிஸ், திண்டுக்கல் மாவட்டத் தலைவா் வேல்முருகன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சீனிவாசன், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலா் வீரப்பெருமாள், கமுதி மறவா் இன அறக்கட்டளை செயலா் கணேசன், பொருளாளா் செல்லப்பாண்டியன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரி முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் மூக்கூரான், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது!

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து ... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும... மேலும் பார்க்க

தொண்டியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை!

தொண்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி 5-ஆ... மேலும் பார்க்க