மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோதனை!
அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குரும்பூா் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 4.15 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.
இதையொட்டி காலை மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிக்கால சிறப்பு பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனாா் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வருதலும் நடைபெற்றது.
தினசரி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனாா் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் வலம்வருதலும் நடைபெறுகிறது.
விழாவின் 6ஆம் நாளான ஏப். 7ஆம் தேதி பகல் 1 மணிக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது.
10ஆம் நாளான ஏப்.11ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு மகா சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு உற்சவ அய்யனாா் கற்பக பொன்சப்பரத்தில் எழுந்தருளி மேலப்புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வருதலும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்துள்ளனா்.