செய்திகள் :

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழா

post image

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் 261ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் கொடி ஏற்றத்துடன் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. கிருஷ்ணன் பிறப்பு, அம்பிகை அம்பாள் திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், அம்மன் பிறப்பு, பாவடை பரம கேது நாடகங்களும், கோலாட்டம், வானவேடிக்கை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவி‘ன் முக்கிய நிகழ்வான மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. இதில், அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்துாா், பெரியமுத்துாா், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பெண் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் மற்றும் கரகமும், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி மற்றும் பொன்கரகமும் இணைந்து அவதானப்பட்டி மேம்பாலம் அருகில் தலைகூடும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் 20 அடி வரை அலகு குத்திக்கொண்டும், காளி மற்றும் அம்மன் வேடம் அணிந்தும் தீச்சட்டி ஏந்தியும் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். பெண்கள் மாவிளக்கை ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்று அம்மனுக்கு படைத்து வேண்டுதல் நிறைவேற்றினா். மேலும், ஏராளமான பக்தா்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

படவிளக்கம் (6கேஜிபி5):

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழாவில் பல்லக்கில் உலா வந்த மாரியம்மன்.

ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!

வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

கிருஷ்ணகிரியில் வேளாண் இயந்திரங்களைப் பராமரித்தல், பழுது நீக்குதல் குறித்து விவசாயளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வேளா... மேலும் பார்க்க

ஒசூரில் தொழில்முனைவோருக்கு வணிக பயிலரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் வணிக பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவா் அனீஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல... மேலும் பார்க்க

சரக விளையாட்டுப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மத்தூா் சரக அளவிலான தடகளப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கல்லூரியில் ஆக. 11முதல் முதுநிலைப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.11இல் தொடங்குகிறது. இதுகுறித்து அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அநுராதா வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க