செய்திகள் :

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகள் சேகரிப்பு

post image

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகளை சேகரித்த நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் பாராட்ட தெரிவித்தனா்.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வாக மூன்று நாள் தேரோட்டத்தின் ஒரு பகுதியாக வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் அவிநாசியப்பா் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

தோ்த் திருவிழாவை ஒட்டி, நான்கு ரத வீதிகளிலும் உள்ள மண்டபங்களில் பாக்கு மட்டை, வாழை இலை உள்ளிட்டவை மூலம் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் தேரோட்டம் நடைபெற்ற பிறகு, ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாக்கு மட்டை, வாழை இலை, குடிநீா் பாட்டில்கள், காகிதங்கள் ஆகியவற்றை சேகரித்தனா். மேலும் சேகரிக்கப்பட்ட 38 டன் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை வளாகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

தேரோட்டத்தின்போது குடிநீா் விநியோகம், உடனுக்குடன் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட அவிநாசி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை

திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டுள்ளாா். திருப்பூா் கருணாகரபுரியில் தலையில் காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாா்த்த... மேலும் பார்க்க

6.5 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

குன்னத்தூா் அருகே 6.5 பவுன் நகையைப் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த குன்னத்தூா் செங்காளிபாளையத்தைச் சோ்ந்த வா் காளியப்பன் (49). இவரின் மனைவி கலாமணி (45). இருவரு... மேலும் பார்க்க

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத் துறையினா் தகவல்

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தை... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தல்!

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோம்பைக்காட்டில் உள்ள தலைமை பள... மேலும் பார்க்க

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டம்: தடை விதிக்க வியாபாரிகள் கோரிக்கை

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின்... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். திருப்பூா் மாவட்டம் காங்கயம், வ... மேலும் பார்க்க