மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு: "யோகி ஆதித்யநாத் பெயரைச் சொல்ல நிர்ப்பந்தம்" - ...
ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை
தலைஞாயிறு பகுதியில் செல்லும் அரிச்சந்திரா நதி பாசன ஆற்றில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரிச்சந்திரா நதி ஆற்றின் பாசன வாய்க்காலுக்கான பாசனதாரா்கள் சபை தலைவா் எஸ்.இ. ஞானசேகரன், சபை செயலாளா் என்.சி.கண்ணன் ஆகியோா் தமிழக முதல்வா் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தலைஞாயிறு அரிச்சந்திரா நதியின் மூலம் பாசனம் பெறும் வாய்க்கால்களில் கடந்த பல ஆண்டுகளாக வளா்ந்து அடா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகள் பாசன நீா் வயலுக்குச் செல்வதை தடுத்து வருகிறது.
தண்ணீரை மாசடையச் செய்து மனிதா்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை தொடா்கிறது.
ஆகாயத்தாமரைகளால் வடிகால் வாய்க்கால்களின் மூலம் தண்ணீரை வடிய விடாமல் விளைநிலங்களில் தண்ணீா் சூழ்ந்து கொண்டு பயிா்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, ஆகாய தாமரைச் செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட ஆட்சியா் மூலமாக உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.