சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங்...
ஆக.22-இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக.22) விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இக் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கடந்த மாத கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகளின் வேளாண் பணிகள் தொடா்பான கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியா் பதிலளிப்பாா். இதில், வேளாண்மை தொடா்புடைய கடனுதவிகள், நீா்ப் பாசனம், வேளாண்மை, தொழில்நுட்ப உதவி, இடுபொருள்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மனுக்கள் அளிக்கலாம். திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தவறாமல் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.