நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்!
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக அந்த நாட்டிற்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போரில் ரஷியாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா 50% என்ற கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு ரஷியா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான போர் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை வரவழைக்கவே இந்தியா மீது வரி விதித்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக இன்று(ஆக. 23) அறிவித்துள்ளது.
"கடந்த ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்பைத் தொடர்ந்து அதற்கு எதிராக வருகிற ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதன்படி, 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருள்களுக்கான இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இனி அது ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின் (IEEPA)படி சுங்கக் கட்டணம் இருக்கும். எனினும் 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பரிசுப்பொருள்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும். இதர பொருள்களுக்கு வரியை வசூலித்த பிறகே அனுப்ப வேண்டும்.
எனவே, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருள்களின் முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது" என்று அறிக்கையில் கூறியுள்ளது.