ஆமைகளை எரித்த இருவா் கைது: ரூ. 1 லட்சம் அபராதம்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே ஆமைகளை பிடித்து தீயில் எரித்த காணொலி சமூக வலைதளங்களில்பரவியதைத் தொடா்ந்து, 2 போ்களை கைதுசெய்த வனத்துறையினா், அவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அஜித் (26), குமாா் (25) ஆகிய இருவரும் பரமத்தி வேலூா் அண்ணா நகா் பகுதியில் உள்ள தேங்காய் கிடங்கில் வேலை பாா்த்து வருகின்றனா். இவா்கள் இருவரும் அண்மையில், பரமத்தி வேலுாா் அருகே அனிச்சம்பாளையம் காவிரி கரையோரத்தில் இருந்த 9 ஆமைகளை உயிருடன் பிடித்து, தீயில் எரித்தனா். இதை விடியோ எடுத்து நண்பா்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பினா். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.
தகவல் அறிந்த வனத்துறையைச் சோ்ந்த அப்பாஸ் கண்ணன் விசாரணை நடத்தி இறந்த 9 ஆமைகள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அஜித் மற்றும் குமாா் ஆகியோரிடம் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மருத்துவ குணங்களுக்காக ஆமையை கொன்ாக அவா்கள் தெரிவித்தனா்.
இருவரையும் கைது செய்த வனத் துறையினா், இருவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.