செய்திகள் :

ஆலங்குளம் காவல் நிலையம் இடமாற்றம்

post image

ஆலங்குளம் காவல் நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இட மாற்றம் செய்யப்பட்டது.

ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த காவல் நிலையம், நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக காவல் நிலைய வளாகமே முற்றிலும் அகற்றப்பட்டு பிரதான வாசல் வரை கழிவுநீா் வடிகால் கட்டப்பட்டது.

1998-இல் கட்டப்பட்ட இந்தக் காவல் நிலைய கட்டடம் சாலையை விட சில அடி உயரமாக இருந்த நிலையில், சாலை மட்டத்தை விட பல அடி பள்ளத்தில் சென்ால் கடந்த ஆண்டு அக். 2 ஆம் தேதி பழைய மகளிா் காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது.

அந்தக் கட்டடமும் சாதாரண மழைக்கும் தாக்குப்பிடிக்காமல் இருந்ததால் மறுபடியும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அலுவலகப் பணிகள் அங்கு மாற்றம் செய்யப்பட்டதால், பழைய அலுவலகக் கட்டடத்தில் காவல் நிலையம் செயல்பட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து அந்தக் கட்டடம் காவல் நிலையத்துக்கு ஏற்றவாறு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் அங்கு காவல் நிலையம் செயல்படத் தொடங்கியது.

குற்றாலம் சாரல் திருவிழா: ஜூலை 20இல் தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை (ஜூலை19) தொடங்குவதாக இருந்த சாரல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே 2 கோயில்களில் திருட்டு

ஆலங்குளம் அருகே இரு கோயில்களில் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் உள்ள கடற்கரை மாடன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம... மேலும் பார்க்க

சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சிவகிரி சிறப்பு உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் ராயகிரி ஐந்து அடித்தான் முக்கு அருகில் வாகனத் தணிக்கையில் ஈடு... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அரசுப் பள்ளியில் பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு,... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பட்டியில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே ஆட்டுப் பட்டியில் தீப்பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி உயிரிழந்தன. வாசுதேவநல்லூா் அருகே உள்ள கோட்டையூா் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையண... மேலும் பார்க்க

காரிசாத்தான் கிராமத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு!

சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள காரிசாத்தானில், மகாத்மா காந்தி ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.... மேலும் பார்க்க