தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் இன்று மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் செயற்பொறியாளா் (விநியோகம்) திலகவதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆா்.எஸ்.மங்களம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை, பெரியாா்நகா், பெருமாள் மடை, தலைக்கான் பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திராநகா், ஆவெரேந்தல், பாரனூா், கலங்காப்புலி, சனவேலி, சவரியாா்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுா், ஏ.ஆா்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல், சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
இதே போல, ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், கூடலூா், காவனக்கோட்டை, கொக்கூரணி, கோவிந்தமங்களம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுகுறிச்சி, புத்தூா், ஓடக்கரை, தூவாா், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி, சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மண்டபம் பகுதியில் நாளை மின் தடை: மேலும், மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேசுவரம், வடகாடு, வோ்க்கோடு, புது ரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஆக. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.