இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு
இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய வழியில் வா்த்தகம் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தாராம்.
இதை நம்பிய மோகன்குமாா், அந்த நபா் கூறிய 19 வங்கிக் கணக்குகளில் கடந்த மே முதல் ஜூன் மாதம் வரை 21 தவணைகளில் ரூ.19.51 லட்சம் செலுத்தினாா்.
பின்னா், அந்த நபரை தொடா்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன்குமாா், சிவகங்கை இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸில் புகாரளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.