செய்திகள் :

இதயம் தொடரில் இணைந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் இணைந்துள்ளார்.

நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டு விடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்வேதா குமார், இந்த வாய்ப்பின் மூலம் முழுநேர நடிகையாக மாறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் பிரலமான இவர், இதயம் தொடரில் நடிப்பதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், கதையில் புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

மிகுந்த உணர்வுப்பூர்வமான, யமுனா என்ற பாத்திரத்தில் நடிப்பதால், தனது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு ஸ்வேதாவிற்கு இத்தொடரில் அமைந்துள்ளது.

ஸ்வேதா குமார்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த இந்தத் தொடரில் ஜனனி அசோக் குமார் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக ரிச்சர்ட் ஜோஷ் நடித்தார்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் ஜனனி அசோக் குமார் இதயம் தொடரில் இருந்து விலகியதால், அத்தொடரை முடித்துவிட்டு, இதயம் -2 பாகத்தை எடுத்து வந்தனர். இதில் ஜனனி அசோக் குமாருக்கு பதிலாக பல்லவி என்பவர் நாயகியாக நடித்து வருகிறார்.

பல்லவி - ரிச்சர்ட்

இதனிடையே யமுனா என்ற பாத்திரத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஸ்வேதா குமார் இதயம் தொடரில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் கதை! மகளே என் மருமகளே!

The Instagram celebrity swetha kumar has joined idhayam serial, which is airing on Zee Tamil TV.

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிர... மேலும் பார்க்க

தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்

மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. வடுவூர் மேல்பாதி ஏஎம்சி கபடி கழகம் சார்பில், தென்னிந்திய ... மேலும் பார்க்க

ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் பெங்களூரு... மேலும் பார்க்க

மகளிர் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

சின்னா், ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந... மேலும் பார்க்க

நாளை முதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப... மேலும் பார்க்க