அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; ...
இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை: முன்னாள் ஆஸி. வீரர்
இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.
முன்னாள் ஆஸி. வீரர் கூறுவதென்ன?
நாளை மறுநாள் முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லாததே முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சாப்பல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இருப்பினும், அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சொதப்பலான ஃபீல்டிங் முக்கியமான காரணம் கிடையாது. இந்திய அணிக்கான பல்வேறு பிரச்னைகளும் அவர்களே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொண்டதாகும். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டிய ஹாரி ப்ரூக், நோபால் காரணமாக விக்கெட் ஆகவில்லை. அது இந்திய அணி செய்த மிகப் பெரிய தவறாக மாறியது.
இந்திய அணியில் வித்தியசமான பந்துவீச்சு வரிசை இல்லாதது மிகப் பெரிய பிரச்னையாக எனக்குத் தெரிகிறது. ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர, இந்திய அணியின் பந்துவீச்சில் பெரிய வித்தியாசம் இல்லை. மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக, கிட்டத்தட்ட ஒரே கோணத்தில் பந்துவீசுகிறார்கள். பந்துவீச்சில் மாற்றத்தைக் கொண்டுவரும்போது, விக்கெட் எடுக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. புதிய பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் வித்தியாசம் இருக்கும். ஆனால், இந்திய அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சில் பெரிய அளவில் வித்தியாசங்களைக் கொண்டுவருவதில்லை.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற முடியாத சூழல் உருவாகும் பட்சத்தில், இடதுகை வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். அதேபோல, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடினாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டும். தொடர்ச்சியாக இரண்டு சிறந்த பந்துவீசுகள் வீசப்படுவதை பார்க்க முடிவதில்லை. பேட்டர்கள் போன்று பந்துவீச்சாளர்களும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
Australia batting legend Greg Chappell believes India paid the price for a lack of variety in their bowling attack during the first Test against England.
இதையும் படிக்க: 2-வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா? முன்னாள் இங்கிலாந்து வீரரின் அறிவுரைகள் உதவுமா?