இந்திய அணியின் நீண்டகால ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவெடுப்பார்: ரவி சாஸ்திரி
இந்திய அணியின் அடுத்த நீண்டகால ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவெடுப்பார் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (ஜூலை 23) தொடங்குகிறது.
ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் அடுத்த நீண்டகால ஆல்ரவுண்டராக உருவெடுக்கும் அனைத்துப் பண்புகளும் வாஷிங்டன் சுந்தருக்கு இருப்பதாக நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் எப்போதும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பதை விரும்புகிறேன். அவரை முதல் நாள் பார்த்தவுடன், இந்திய அணிக்கான சரியான ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் என்பதைக் கூறினேன். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆல்ரவுண்டராக செயல்படும் பண்புகள் அனைத்தும் அவருக்கு இருக்கிறது. வாஷிங்டன் சுந்தருக்கு 25 வயதுதான் ஆகிறது. அவர் நிறைய டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
Ravi Shastri sees a long and successful Test career for India's up-and-coming all-rounder
— ICC (@ICC) July 22, 2025
More from the latest #TheICCReview ⬇️
இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் அவர் மிகுந்த அபாயகரமான பந்துவீச்சாளராக இருப்பார். அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இயல்பாகவே திறமைவாய்ந்த பேட்டர். அவர் 8-வது இடத்தில் களமிறக்கப்படாமல், 6 இடத்தில் களமிறக்கப்படலாம். அவர் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறார். வெளிநாட்டு ஆடுகளங்களிலும் அவர் சிறப்பாக பந்துவீசுகிறார் என்றார்.
25 வயதாகும் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 545 ரன்கள் மற்றும் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அந்த கடைசி 5 ஓவர்கள் இருக்கே... ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு மிட்செல் மார்ஷ் புகழாரம்!
Former India head coach Ravi Shastri has said that he believes Washington Sundar will emerge as the next long-term all-rounder for the Indian team.