”இந்த நொடி வரை எந்த சந்தோஷத்தையும் அனுபவிச்சதில்ல” - கலெக்டரிடம் உதவி கேட்டு கலங்க வைத்த முதியவர்
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம சுப்ரமணியன் (65). உடம்பே தெரியாத அளவுக்குச் சிறு மற்றும் பெரிய கட்டிகள் இவர் உடல் எங்கும் உள்ளன.
கலங்கிய கண்களும், எதாவது நல்லது நடக்காத என்கிற ஏக்கமும் அவரது முகத்தில் வெளிப்பட்டது. குறைதீர்க் கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்த ராமசுப்ரமணியன், "சிறு வயது முதலே எனக்கு உடம்பில் தோல் நோய் பிரச்னை இருக்கு. இதனால் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னைத் தள்ளி வைத்து விட்டனர்.

எனக்கு எந்த வருமானமும் கிடையாது. நீங்கள்தான் எனக்கு உதவி தொகை வழங்கி என்னை வாழ வைக்க வேண்டும். கலெக்டரம்மா கருணை காட்டுங்க" என்று கோரினார்.
அவரது நிலை அங்கிருந்த பலரையும் பதற வைத்தது. "இருக்குற சொச்ச காலத்தையாவது அவர் நிம்மதியாக வாழ்வதற்கான வழி கிடைக்க வேண்டும்" என நினைத்து கலங்க வைத்தது.
ராம சுப்ரமணியனிடம் பேசினோம், "கல்லணை பக்கத்துல இருக்கிற தோகூர் என்னோட சொந்த ஊர். சின்ன வயசுல எல்லோரையும் போலதான் தான் நானும் இருந்தேன். ஆனால் யார் செஞ்ச பாவமோ தெரியல வளர வளர என் உடம்புல சின்ன சின்ன கட்டிகள் உருவானது.
டாக்டர்கிட்ட காட்டினதுக்கு இது குணப்படுத்த முடியாத தோல் நோய்னு சொல்லிட்டாரு. அதன் பின்னர் அந்த கட்டி உடம்பு முழுக்க எங்கும் வந்திருச்சி.

இதனால் என்னை யாரும் கல்யாணம் செஞ்சுக்கல. குடும்பத்தில் உள்ளவர்களும் என்னைக் கவனிக்காமல் விட்டு விட்டனர். இப்ப எனக்குனு யாரும் இல்லை.
வயசு ஆக ஆக கட்டிகள் பெரிசாகிகிட்டே வருது. உடம்புல் கட்டிகள் இல்லாத இடமே இல்ல. இது தர தொந்தரவுல என்னால எந்த வேலையும் செய்ய முடியல. வயித்த நிரப்புறதுக்கே பாடாத பாடு படுறேன்.
என் வாழ்க்கையில் இந்த நொடி வரை நான் எந்த சந்தோஷத்தையும் அனுபவிச்சது இல்லை. இருக்குற சொச்ச காலத்தையாவது நிம்மதியா பசி, பட்டினி இல்லாமல் வாழணும்.
அதற்கான உதவி அரசால்தான் செய்ய முடியும். கலெக்டர்கிட்ட மனு கொடுத்தால் பிரச்னை தீரும்னு சொன்னாங்க அதனால் வந்திருக்கேன். கலெக்டரம்மாதான் கருணை காட்டணும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs