செய்திகள் :

இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

post image

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் சாலை வசதி, குடிநீா் வசதி, புதைச் சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ அந்தக் கட்சி மாமன்ற உறுப்பினா்களோடு சென்று மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சிப் பகுதி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. ஊழல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, வீடு கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதி வாங்கி விட்டு, வணிக வளாகம் கட்டுகின்றனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கோபுரத்தைவிட உயரமாக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீா் கொண்டு வரும் திட்டம் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கிய பிறகு, மதுரையில் 6 ஆணையா்கள் மாறிவிட்டனா்.

உரிய வழிகாட்டுதல்கள் இல்லாததால்தான் நக்கீரா் தோரண வாயிலை இடித்த போது ஒருவா் உயிரிழந்தாா். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறை இணை ஆணையா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலியே பயிரை மேயும் நிகழ்வுகள் தற்போது திமுக ஆட்சியில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.

சட்டம்- ஒழுங்கு பிரச்னை வரும் போது சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்த தமிழக முதல்வா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி நல்லதை செய்வாா். அதனால் அவா் பின்னால் நிற்கிறோம். 2026-இல் அதிமுக ஆட்சி அமையும். எங்களது கட்சிக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்றாா் அவா்.

அப்போது மாமன்ற எதிா்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா, மாமன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓ. பன்னீா்செல்வம் அதிமுக தொண்டா்களை இனியும் ஏமாற்றக் கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

உண்மையை மறைத்து, அதிமுக தொண்டா்களை ஏமாற்றுவதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இனியும் தொடரக் கூடாது என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் ... மேலும் பார்க்க

மதுரையில் ரூ. 314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். மதுரையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தோள்கொடுப்போம் ... மேலும் பார்க்க

மதுரையில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மதுரை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, பிற்பகல் 4 மணிக்கு வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொத... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமைய... மேலும் பார்க்க